நாமக்கல், நவ.26: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல், இரவு வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மழை சற்று தணிந்தது. நேற்று காலை 6 மணி வரை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): எருமப்பட்டி 2, மங்களபுரம் 6, மோகனூர் 2, நாமக்கல் 9, பரமத்திவேலூர் 4, ராசிபுரம் 3, சேந்தமங்கலம் 10, கலெக்டர் அலுவலகம் 11 மற்றும் கொல்லிமலையில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
