×

முதியவரின் இறுதிச்சடங்கில் டூவீலர் பாய்ந்து 15 பேர் காயம்

 

மல்லசமுத்திரம், டிச. 8: மல்லசமுத்திரம் அருகே முதியவரின் இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த கூட்டத்துக்குள் மின்னல் வேகத்தில் புகுந்த டூவீலரால் 15பேர் காயம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே திருச்செங்கோடு- நாமக்கல் ரோட்டில் உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). நேற்று முன்தினம், இவர் வயது மூப்பு காரணமாக இறந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
இறுதிசடங்கை முடிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சாலையோரம் திரளான உறவினர்கள் நின்றிருந்தனர். அப்போது, திருச்செங்கோடு- நாமக்கல் மெயின்ரோட்டில் மின்னல் வேகத்தில் ஒரு டூவீலர் வந்தது. அந்த டூவீலர் முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்லமுயன்றபோது, சாலையோரம் கந்தசாமியின் இறுதிச்சடங்கு செய்தவர்களின் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags : Mallasamuthiram ,Pullakkuundampatti ,Thiruchengode-Namakkal road ,Namakkal ,
× RELATED 1.95 லட்சம் வாக்காளர்களை நீக்க முடிவு?