×

கப்பியாம்புலியூரில் பரபரப்பு பாலம் அமைக்கக்கோரி மக்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி, நவ. 26: கப்பியாம்புலியூரில் சாலை விபத்துகளை தவிர்க்க பள்ளி எதிரே மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விக்கிரவாண்டி ஒன்றியம் கப்பியாம்புலியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தஞ்சாவூர்-கும்பகோணம் நான்கு வழிச்சாலையில் உள்ளது. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும்போது அதிக அளவில் சாலை விபத்தில் சிக்கி உயிர் பலி ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு நான்கு வழிச்சாலையில் பள்ளி எதிரே மேம்பாலம் அமைத்து தர கோரி நேற்று பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Kappiampuliyur ,Vikravandi ,Panchayat Union Middle School ,Vikravandi Union ,Thanjavur-Kumbakonam ,highway ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...