சிங்கபெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரை 6 வழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை டெண்டர் கோரியது. 28 கி.மீ தூரத்திற்கு ரூ.2,700 கோடி மதிப்பீட்டில் சிங்கபெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரை சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை எல்லை சாலைகள் திட்டத்தின் இறுதிக் கட்டமாக ஆறுவழிச் சாலைத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகம் – மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ தூரத்திற்கு பல கட்டங்களாக சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
