×

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் டிச. 10ம் தேதி நடக்க உள்ள நிலையில் பாதுகாப்பு கோரி ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம்..!!

சென்னை: அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 10ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு கோரி ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், 10.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட விண்ணப்பம். கனம் மாநகர காவல் ஆணையருக்கு எனது வணக்கம்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பிற்கிணங்க வருகின்ற 10.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரி வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற இருப்பதால் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags : AIADMK ,Avadi Police Commissioner ,Chennai ,Vanagaram, Chennai ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...