- கடம்பத்தூர் கிழக்கு
- நிர்வாக அலுவலர்
- Duraimurugan
- திருவள்ளூர்
- திருவள்ளூர் மாவட்டம்
- கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம்
- கடம்பட்டூர் கிழக்கு
- கடம்பத்தூர் மாத்தூர்
- திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது; திமுக நிர்வாக வசதிக்காகவும் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம், கடம்பத்தூர் கிழக்கு மற்றும் கடம்பத்தூர் மத்திய ஒன்றியங்கள் என 2 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, அந்த ஒன்றியங்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஊராட்சிகள் கொண்டதாக அமையும். மேற்குறிப்பிட்டவாறு பிரிக்கப்பட்ட ஒன்றியங்களில் திமுக பணிகள் செவ்வனே நடைபெற ஒன்றிய பொறுப்பாளர்கள் பின்வருமாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கிழக்கு ஒன்றியத்தில் அதிகத்தூர், தண்டலம், கீழ்நல்லாத்தூர், மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், இலுப்பூர், வலசைவெட்டிக்காடு, வெள்ளேரித்தாங்கல், பாப்ரம்பாக்கம், புதுவள்ளூர், கொப்பூர், வெங்கத்தூர் ஆகிய 12 ஊராட்சிகள் அடங்கும். இதன் பொறுப்பாளராக வெங்கத்தூர் ஊராட்சி மணவாளநகர், கபிலர் நகர், வள்ளி தெரு கே.அரிகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடம்பத்தூர் மத்திய ஒன்றியத்தில் விடையூர், கடம்பத்தூர், புதுமாவிலங்கை, காவங்கொளத்தூர், சிற்றம்பாக்கம், செஞ்சி, இராமன்கோயில், பிரையாங்குப்பம், ஏகாட்டூர் ஆகிய 9 ஊராட்சிகள் அடங்கும். இதன் பொறுப்பாளராக பிளாட் எண் 10, திருவள்ளூர் தாலுக்கா செஞ்சி அஞ்சல், பனப்பாக்கம், பாலாஜி நகர் வழக்கறிஞர் ஏ.பிரகாஷ் ஞான ஒளி, என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
