×

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. இந்நிலையில், தென்குமரிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

மீண்டும் புயல் சின்னம் உருவாகியிருக்கிறது. இதனால் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை – தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும். தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 6 மணி நேரத்தில் வலுப்பெறும்.

அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடையும். தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 7 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. காவிரி படுகை, வட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைய உள்ளது; தென் மாவட்டங்களில் மழை குறைய வாய்ப்பு உள்ளது.

Tags : Bengal ,Survey Center ,Chennai ,Kumar Sea ,Meteorological Centre ,Tamil Nadu ,South American Sea ,
× RELATED பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும்...