×

ஏழாயிரம்பண்ணையில் சாலையை சீரமைக்க கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை, நவ.25: சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை முதல் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இச்சாலையின் வழியாக தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், பட்டாசு ஆலை வாகனங்கள், டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலையானது குறுகியதாகவும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Ezhayirampannai ,Sattur ,Kovilpatti ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா