- Peelamedu
- கோயம்புத்தூர்
- மதிமுக
- சித்ரா
- வி.கே. சாலை
- அவனஷி சாலை
- கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்
- முன்னோடி மில் சாலை
- அரியாஸ் க்ராஸ்ரோட்ஸ்
- கிருஷ்ணம்மாள் கல்லூரி சந்திப்பு
கோவை,நவ.25:மதிமுக கவுன்சிலர் சித்ரா கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட விகே ரோடு, அவிநாசி ரோடு சந்திப்பிலிருந்து பயனீர் மில் ரோடு, ஆரியாஸ் குறுக்கு சந்து, கிருஷ்ணம்மாள் கல்லூரி சந்திப்பு ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற இருப்பதால் மழைநீர் வடிகால் பாதை அமைக்க வேண்டாம் என நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் தவிர்த்து வந்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் சாக்கடை நீர் தேங்கி சாலையில் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மெட்ரோ ரயில் இல்லை என ஒன்றிய அரசு அறிவித்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை உடனடியாக மழைநீர் வடிகால் கட்ட வேண்டும். மாவட்ட கலெக்டர் நேரடியாக கள ஆய்வு செய்து உடனடியாக நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல அவிநாசி ரோடு மேம்பாலப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் யூ டேர்ன் இருந்து வருகிறது.இதனால் பீளமேடு,நவ இந்தியா, எஸ்ஓ பங்க்,லட்சுமி மில்ஸ்,குப்புசாமி நாயுடு மருத்துவமனை,விமான நிலைய சந்திப்பு, ஹோப் காலேஜ் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.எனவே அவினாசி ரோடு முழுவதும் யூ டேர்ன்களை நீக்கிவிட்டு, சிக்னல் அமைத்து தருமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
