- திமுக வர்த்தகர்கள்
- கோயம்புத்தூர்
- திமுக
- வர்த்தகர்கள்
- காளப்பட்டி, கோயம்புத்தூர்
- செயலாளர்கள்
- தோண்டமுத்தூர் ரவி
- துரை.செந்தமிழ் செல்வன்
- மாநில மாணவர் சங்கம்
- ராஜீவ் காந்தி
- மாநில வர்த்தகர்கள்
- காசி…
கோவை,நவ.25:கோவை காளப்பட்டியில் திமுக வர்த்தகர் அணி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், கோவை மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, துரை.செந்தமிழ் செல்வன் ஆகியோர் வரவேற்றனர். மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், குலக் கல்வி, இந்தி, சமஸ்கிருதம் திணிக்கும் ஒன்றிய அரசின் கல்வி திட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என தெரிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வியாபாரிகளை மிரட்டி பாராட்டு கூட்டம் நடத்திய ஒன்றிய நிதி அமைச்சரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ முத்துசெல்வி,கிருஷ்ணிகரி சீனிவாசன், திண்டுக்கல் ஜெயன், அசோக்பாண்டியன், மாவட்ட அமைப்பாளர்கள் தென்காசி முத்துக்குமார்,கிருஷ்ணகிரி மணி விஜயன், பவானி சுப்ரமணியன், அந்தியூர் மகாலிங்கம், புதுக்கோட்டை பாரி, சிற்றரசு, கும்பகோணம் ராஜூ, சென்னை தியாகராஜன், ஆத்தூர் மணிலால், வெங்கடேசன், விழுப்புரம் சங்கர், சங்ககிரி சேட்டு, ஊட்டி ராகமத்துல்லா,கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிசெல்வன்,வடக்கு மாவட்ட அமைப்பாளர் வேலுசாமி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள்,தலைவர்கள் என பலர் பங்கேற்றனர்.
