திண்டிவனம்: தந்தை, மகன் அதிகார போட்டியால் பாமக இரண்டாக உடைந்துள்ளது. இந்நிலையில், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் தலைமையிலான பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் இன்று (25ம்தேதி) காலை 10.30 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் நடக்கிறது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் கலந்துரையாடுவார் என தெரிகிறது. மேலும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
