×

டிராக் ஆசியா சைக்ளிங் இலச்சினை அறிமுகம்

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக சென்னையில், டிராக் ஆசியா கோப்பை சைக்ளிங் போட்டிகள், வரும் 2026 ஜனவரி 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில், இந்தியா, ஈரான், மலேசியா, சீனா, இந்தோனேஷியா, கஜகஸ்தான், நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பாக சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்ஏடிடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, டிராக் ஆசியா கோப்பைக்கான இலச்சினையும், தீரன் என பெயரிடப்பட்ட பிரத்யேக சின்னமும் அறிமுகம் செய்யப்பட்டது.

Tags : Track Asia ,Chennai ,India ,Track Asia Cup ,Tamil Nadu ,Physical ,Education ,Sports ,University ,Chennai… ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...