×

ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் அதிமுக இழந்துவிட்டது: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு, செயற்குழு போன்ற நடவடிக்கையால் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் அதிமுக இழந்துவிட்டது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் டிச.15ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். எடுக்கும் முடிவு தொண்டர்கள் விரும்பும் முடிவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி தொடங்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலில் இறுதி முடிவு எடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு முழு அதிகாரம். இனி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகமாக செயல்படும்’ என வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

Tags : O. ,Paneer Selvam ,Chennai ,UN ,General Committee ,Executive Committee ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...