×

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் முறையாக வருகிறார்களா?

*பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு

வேலூர் : வேலூரில் உள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் முறையாக வருகிறார்களா? கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை ரூ.198 கோடி மதிப்பில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது, இந்த மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது.

வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் போதுமான அளவு டாக்டர்கள் பணியில் இருக்கின்றார்களா, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் எத்தனை பேர் சிகிச்சைக்கு வந்து உள்ளனர்.

டாக்டர்கள், பணியாளர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா என்பதை அறிய வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல் மருத்துவ சேவைகள் குறித்து டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை மேற்பார்வையாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு சென்று கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களிடம் போதுமான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

Tags : Pentland Government Hospital ,Vellore ,
× RELATED வந்தே பாரத் ரயிலில் ரூ.10.50 லட்சத்துடன் பாஜ நிர்வாகி சிக்கினார்