சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இன்றுமுதல் 15ம் தேதி வரை மாநில காங். தலைமை அலுவலகம், மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம். 234 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. காங்கிரஸ் உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை குறிப்பிட்டு விருப்ப மனு அளிக்கலாம்.
