சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ச்சியாக தேர்தல் சிறப்பு சீர்திருத்த பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் உயிரிழப்பது மிகுந்த துயரமும், வருத்தமும் அளிக்கிறது.
இந்த நிலை, ஒன்றிய அரசின் அலட்சியத்தையும் மனிதநேயமற்ற நிர்வாகத்தையும் வெளிப்படுத்துகிறது. அனைத்து மாநிலங்களிலும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்பட வேண்டும். ஒரு பணியாளரின் உயிர் மதிப்பற்றதல்ல, அவர்களைப் பாதுகாப்பது ஒரு அரசின் அடிப்படை கடமையாகும்.
