×

கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு காஞ்சி மக்களுடன் விஜய் இன்று சந்திப்பு

ஸ்ரீபெரும்புதூர்: கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு சுங்குவார்சத்திரம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களை இன்று தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசுகிறார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அடுத்து குண்ணம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த, கல்லூரி வளாகத்தில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களை சந்தித்து, உரையாற்ற உள்ளார். இந்த சந்திப்பு நிகழ்ச்சிகாக ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள் அரங்கில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து, எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முழுக்க முழுக்க உள்ளரங்கு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

மேலும், அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிகழ்ச்சியில் 2,000 பேர் மட்டும் பங்கேற்பார்கள். இதற்காக பாதுகாப்பு கேட்டு தமிழக வெற்றி கழக ஸ்ரீபெரும்புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் கார்த்திக், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தார். அதன்படி, அக்கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த், நிகழ்ச்சி நடைபெறவுள்ள உள்ளரங்கை நேற்று முன்தினம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.கரூரில் பிரசாரத்திற்கு விஜய் சென்றபோது 41 பேர் நெரிசலில் சிக்கி பலியானார்கள். அதன் பிறகு கட்சி அலுவலம் மற்றும் பனையூர் வீட்டிலேயே இருந்தார். தற்போது மீண்டும் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார்.

Tags : Vijay ,Kanchipuram ,Karur ,Sriperumbudur ,Thaveka ,Kanchipuram district ,Sunguvarchatram ,Sriperumbudur union ,Kunnam ,
× RELATED டெல்லி புறப்பட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன்