- வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்கம்
- திருத்துறைப்பூண்டி
- தமிழ்நாடு வருவாய் திணைக்களம்
- கிராம உதவியாளர்கள் சங்க மாநில மையம்
- ஜாஹிதா பேகம்
- சிவனார்தங்கல் வருவாய் கிராமம்
- திருக்கோவிலூர் தாலுக்கா, கள்ளக்குறிச்சி மாவட்டம்
- ஐயா
திருத்துறைப்பூண்டி, நவ.22: தமிழ்நாடு வருவாய்த்துறை, கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில மையத்தின் முடிவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சிவனார்தாங்கள் வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வரும் ஜாஹிதா பேகம் (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) என்பவர் எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணியின்போது மேலதிகாரிகளின் அதீத அழுத்தத்தினால் ஏற்பட்ட பணிச் சுமையின் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலைக்கு செய்து கொண்டார்.
ஜாஹிதா பேகம் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவத்துவித்து கொள்வதுடன் எஸ்ஜஆர் படிவம் வழங்கும் பணியில் தொடர்ந்து நெருக்கடியும், அழுத்தமும் கொடுத்துவரும் மேலதிகாரிகளை கண்டித்து திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் வட்டக்கிளை சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
வட்டத்தலைர் பாலசுந்தர் தலைமை வகித்தார். வட்டசெயலாளர்அரவிந்தன் வரவேற்றார், மாவட்ட தலைவர் முத்துவேல் கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
