- சீர்காழி
- கூட்டுறவு வங்கி
- நெப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
- சீர்காழி,
- மயிலாடுதுறை மாவட்டம்…
சீர்காழி, நவ. 22: நெப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் மரங்கள் முளைத்து இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நெப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் எதிர்ப்புறம் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கு மூலம் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய விதைநெல் மற்றும் அடி உரம் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது இந்த கிடங்கு கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில்இருந்து வருகிறது. மேலும் கட்டிடத்தில் மேலே அரச மரங்கள் முளைத்து காணப்படுகிறது. இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வருகை தரும் விவசாயிகள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்து உள்ள பழமையான கிடங்கு கட்டிடத்தை இடித்து அகற்றி அப்பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
