×

திருப்பூர் நகை கண்காட்சியில் போலீசாரின் துப்பாக்கி குண்டு திடீரென வெடிப்பு: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

திருப்பூர்: ஈரோட்டை சேர்ந்த நகை கடை ஒன்றின் சார்பில் திருப்பூர் மங்கலம் ரோடு, பாரப்பாளையம் பகுதியில் தங்க நகைகளின் கண்காட்சி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நகை கண்காட்சியை மங்கலம், எஸ்.ஆர். நகர், பாரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் கண்டு ரசித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை பொதுமக்கள் கண்காட்சி அரங்கில் வைத்திருந்த நகைகளை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி குண்டு வெடித்தது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் அரங்கில் இருந்த ஆண்கள், பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது நகை கண்காட்சி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் துப்பாக்கி குண்டு வெடித்தது தெரியவந்தது.

இது குறித்து மாநகர ஆயுதப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆயுதப்படை போலீஸ் பாலகுமார் என்பவர் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகளை லோடு செய்து விட்டு முறையாக சேப்டிலாக் செய்யாமல் வைத்துள்ளார்.

பாலகுமார் எதிர்பாராத விதமாக துப்பாக்கியை மேல் நோக்கி தூக்கியபோது தெரியாமல் அவரது கைவிரல் டிரிக்கரில் அழுத்தியுள்ளது. இதனால், துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறி வெடித்துள்ளது. மேல் நோக்கி வைத்து துப்பாக்கியை அழுத்தியதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் பாலகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruppur jewelry ,Tiruppur ,Erode ,Mangalam Road, Barapalayam ,Mangalam ,S.R. Nagar ,Barapalayam ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...