ஸ்ரீவில்லிபுத்துார்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 2022-23ல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு படிப்பிற்கு உதவி செய்வதாக கூறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பரமக்குடி அதிமுக முன்னாள் கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சிகாமணி (44), அவரது ஊழியர்கள் அன்னலட்சுமி (34), கயல்விழி (45), புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது (36) ஆகியோரை, பரமக்குடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் போக்சோ நீதிமன்றத்தில் சிகாமணி ஜாமீன் பெற்றார். இதை எதிர்த்து சிபிசிஐடி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தநிலையில், அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து சிகாமணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு சரிதான் என்றும், வழக்கினை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி 5 மாதத்தில் முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கடந்தாண்டு இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி புஷ்பராணி அளித்த தீர்ப்பில் சிகாமணி உள்பட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
