×

ஐயப்ப பக்தர்கள் படையெடுப்பால் பழநியில் ஒரே நாளில் 133 டன் பஞ்சாமிர்தம் விற்று சாதனை

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரித்துள்ளது. பழநி கோயில் வரலாற்றில் கடந்த 2023, டிச. 27ம் தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 283 டப்பாக்கள் (89 டன்) விற்பனை செய்யப்பட்டது அதிகளவாக பதிவாகி இருந்தது.

இது கடந்த 19ம் தேதி முறியடிக்கப்பட்டது. அன்றைய தினம் 1 லட்சத்து 98 ஆயிரத்து 480 டப்பாக்கள் (99.24 டன்) விற்பனை செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 940 டப்பாக்கள் (132.97 டன்) பஞ்சாமிர்தம் விற்பனையாகி உள்ளது. பழநி கோயில் வரலாற்றில் பதிவாகி உள்ள அதிகபட்ச விற்பனை அளவு இதுவாகும்.

Tags : Panchamirtham ,Palani ,Ayyappa ,Thandayutapani ,Swamy Hill Temple ,Palani, Dindigul district ,Palani Temple ,
× RELATED ஜனவரி முதல் வாரத்துக்குள்...