×

கடலூர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஜன.9ம் தேதி மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0: பிரேமலதா அழைப்பு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் வரும் ஜன.9ம் தேதி தேமுதிக சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற உள்ளது. தலைவர் விஜயகாந்த் இந்த கழகத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஆரம்பித்தார்.

கட்சியை ஆரம்பித்தபோது, மதுரையில் 2005ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று 25 லட்சத்திற்கும் மேல் நமது நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களின் பேராதரவோடு மிகப் பிரமாண்ட வெற்றி மாநாடு நடத்தி சரித்திர சாதனை படைத்திருக்கிறோம்.

தலைவர் இல்லாமல் நடத்த இருக்கின்ற முதல் மாநாடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தும் மாநாடு. இந்த மாநாட்டின் வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் வெற்றியாகும். எனவே மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாநாட்டிற்கு நீங்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMDK ,People's Rights Recovery Conference 2.0 ,Cuddalore district ,Premalatha ,Chennai ,General Secretary ,Pasar village, Cuddalore district ,Vijayakanth ,Tamil Nadu ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும்...