×

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிநிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இது மேற்கு- வட மேற்கு நகர்ந்து நாளை தெற்குவங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மேலும் வலுப்பெறும். இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும். மேலும், 24ம் தேதி வரை இதே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,South Andaman Sea ,South East Bay of Bengal ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...