வடக்கு ஒன்றியம் சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

ஊட்டி,ஜன.7:  தி.மு.க. சார்பில் அதிமுக.,வை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் ஊட்டி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கக்குச்சி கிராமத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை வரவேற்றார். தலைமை தேர்தல் பணி செயலாளர் ராமசந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் காமராஜ், கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், நெசவாளர் அணி அமைப்பாளர் எல்கில் ரவி, வர்த்தகர் அணி அமைப்பாளர் யோகேஸ்வரன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சித்ரா செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துக்கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் பசவன், முன்னாள் மீனவர் அணி அமைப்பாளர் கெந்தொரை மகேஷ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் தருமன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முருகேஷ், ஊராட்சி செயலாளர்கள் செல்வன், கண்ணன், கிளை செயலளார்கள் ஆசைதம்பி, ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், காளியப்பன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் மாவட்ட ஆதிதிராவடர் நலக்குழு துணை அமைப்பாளர் செல்வம் நன்றி கூறினார்.

Related Stories:

>