×

நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து நவ.23.24ல் போராட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

 

சென்னை: ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நவ.23.24ல் தஞ்சை, திருவாரூரில் போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. இது தொடரபாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.

கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் நவ.23 அன்று தஞ்சாவூரிலும், நவ.24ல் அன்று திருவாரூரிலும் காலை 10.00 மணியளவில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : EU government ,Dimuka alliance ,Chennai ,Uniya Pa ,J. ,Dimuka ,Thanjai ,Thiruvarur ,EU ,Tamil Nadu ,J. K. Government ,
× RELATED மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு...