×

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

உடுமலை, நவ. 21: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கணபதிபாளையம் கிராம ஊராட்சி வெனசுப்பட்டி கிராமத்தில் நடை பெற்றது. உடுமலை கோட்ட உதவி இயக்குநர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் முருகன், பிரகாஷ் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் 750க்கும் மேற்பட்ட கால்நடைகள், செல்லப்பிராணிகள் மற்றும் கோழிகளுக்கு உரிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.மேலும் முகாமில் சிறந்த கிடாரிக்கன்றுகள் வளர்ப்போர் மற்றும் சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

 

Tags : Livestock Health Awareness Camp ,Udumalai ,Tamil Nadu Government Animal Husbandry Department ,Venesupatti village ,Ganapathipalayam Grama Panchayat ,Divisional Assistant Director ,Venkatesan ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...