×

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்

சேலம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-கொல்லம் (06111), கொல்லம்-சென்னை எழும்பூர் (06112), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06113), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06114), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06119), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06120), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06127),

கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06128), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06117), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06118), ஆகிய சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “இந்த சிறப்பு ரயில்கள் பெரும்பாலும் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக செல்கிறது. அதிகாலை முதல் இரவு வரையில் தொடர்ந்து இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களில் பக்தர்கள், முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்’’ என்றனர்.

 

Tags : Sabarimala ,Tamil Nadu ,Salem ,Railway Administration ,Sabarimala Ayyappa temple ,Kerala ,Chennai Egmore- ,Kollam ,Kollam- ,Chennai Egmore ,Chennai Central- ,Chennai Central ,Chennai… ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...