×

மக்கள் வெள்ளம் என ஏமாற்றுகின்றனர்; நேற்று முளைத்த காளான்கள் ஒரு நாள் மழைக்கு தாங்காது: விஜய்யை டோட்டல் டேமேஜ் செய்த பிரேமலதா

காரைக்குடி: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு நேற்று மாலை வந்த பிரேமலதா பேசுகையில், ‘‘2026 தேர்தல் தேமுதிகவிற்கு முக்கியமான தேர்தல். அனைவரும் எதிர்பார்க்கும் மகத்தான கூட்டணி அமைப்போம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளன. நேற்று முளைத்த காளான்கள் (விஜய்) எல்லாம் ஒன்றும் எடுபடாது. ஒரு நாள் மழைக்கே அது தாங்காது.

தேமுதிக துவங்கி 20 ஆண்டுகள் கடந்து 21வது ஆண்டில் காலடி வைத்துள்ளது. இங்கு வந்த கூட்டம் தானாக வந்தது. ஆனால் சிலர் (தவெக) மக்கள் வெள்ளம் அதிகமாக உள்ளது போல் ஏமாற்றுகின்றனர். போலித்தனம், தங்களை தாங்களே ஏமாற்றுகின்றனர். இங்கு கூட்டம் கூட்ட பக்கத்து தொகுதியில் உள்ளவர்களையும் அழைத்து வருகின்றனர். நேற்று முளைத்த காளான்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் என அனைத்தையும் கடந்த தெளிந்த ஓடையாக நிறை குடமாக எதற்கும் அஞ்சாமல் உள்ளோம்’’ என்று பேசினார்.

Tags : Premalatha ,Vijay ,Karaikudi ,DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,Tamil Nadu ,Ullam Thedi ,Illam Nadi ,Karaikudi, Sivaganga district ,2026 election ,DMDK.… ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...