×

கொட்டும் மழையிலும் கூடகாலி குடங்களுடன் அலையும் கிராம மக்கள்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அவலம்

வாலாஜாபாத்: கொட்டும் மழையிலும் பொதுமக்கள் குடிநீருக்காக, காலி குடங்களுடன் அலைந்து திரிந்து கடும் அவதியடைந்தனர். இதற்கு, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் 10க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, 2 மேல்நிலை தொட்டிகளின் இயந்திரங்களும் பழுதடைந்துன. இதனால், கடந்த 3 நாட்களாக, இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம், அகரம் காலனியில், கடந்த 3 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கவில்லை. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், குடிநீருக்காக அருகில் உள்ள வளாகம் கிராமத்தில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாயில் வரும் தண்ணீரை, வீட்டு  உபயோகத்துக்கு பயன்படுத்துகின்றனர்.புத்தாண்டு கொண்டாடுவோம் என்ற சந்ேதாஷத்தில் இருந்த நாங்கள், காலி குடங்களுடன் தண்ணீருக்காக பல இடங்களுக்கு சுற்றித் திரிய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக போக்க, உரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : pitchers ,
× RELATED எல்லாம் ‘தண்ணி’ படுத்தும் பாடு...