×

ஆரிய சூழ்ச்சிகளை உடைத்தெறிவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: நம் உரிமைக்குரலின் உதயம்! இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரத்தில் உரிய பங்கை பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற Non Brahmin Manifesto-வை செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று. நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி என தொடர்ந்து மெய்ப்பிப்போம்! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்