×

விசாரணை கைதி திடீர் சாவு

கடலூர், நவ. 21: கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (58) என்பவர், மத்திய சிறைச்சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விசாரணை கைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore ,Cuddalore Central Prison ,Balakrishnan ,Tharangambadi ,Mayiladuthurai district ,Central Prison ,
× RELATED வாலிபரை கொலை செய்த தம்பதி கைது