×

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ

 

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10ல் நடந்த கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூவர், உ.பி.யைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் கைது செய்தனர்.

டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது.

சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பலியான டாக்டர் உமர் கடந்த 10-ந் தேதி அரியானாவில் இருந்து டெல்லி செங்கோட்டை வந்த பாதைகளில் போலீசார் இடைவிடாமல் விசாரித்து வருகிறார்கள். குறிப்பாக அவர் எங்கெல்லாம் நின்றாரோ? அங்கு விசாரணை நடத்தப்படுகிறது. டெல்லியில் தொடர் வாகன தணிக்கை நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 73 பேரிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. சம்பவம் நடந்த டெல்லி, வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்ட அரியானா மற்றும் உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு சோதனைகளும், விசாரணைகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்.ஐ.ஏ. விடுவித்துள்ளது. முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்ட மருத்துவர் உமருக்கும் பரிதாபாத்தின் அல்-பலா பல்கலைக். மருத்துவர்களுக்கும் இச்சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10ல் நடந்த கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூவர், உ.பி.யைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் கைது செய்தனர். டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு . வகித்தவர்கள் என என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.

 

 

Tags : Delhi Sengkot, N.J. I. A. ,Delhi ,Cengkot, N.J. I. A. ,car bombing ,Delhi Cengkot ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...