கோவை கொடிசியா மைதானத்தில் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்து, விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். கண்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள வேளாண் பொருட்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கோவையில் மாநாடு நடைபெறுகிறது.
