தீயணைப்பு வீரர்களுக்கு சமூக சேவகர் விருது

ஊத்தங்கரை, ஜன.7: ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். ஊத்தங்கரை கிளை ரெட்கிராஸ் தலைவர் தேவராசு, துணைத் தலைவர் ராஜா, சமூக ஆர்வலர் சசி, உதவி தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை தீயணைப்பு ராமமூர்த்தி, விஜயகுமார், அந்தோணிசாமி, அன்பு, கிருஷ்ணமூர்த்தி, முனுசாமி, உத்திரகுமார், ராமு, சிதம்பரம், மணிகண்டன், சமுத்திரன், சீனிவாசன் ஆகியோரை பாராட்டி சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

Related Stories:

>