×

திமுக ஊராட்சி தலைவர்கள் கூட்டம் உள்ளாட்சி நிதிகளை கொள்ளையடிக்க பல திட்டங்களை அரசு கொண்டு வருகிறது எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தாக்கு

நீடாமங்கலம், ஜன.7: திருவாரூர் மாவட்ட அளவிலான அனைத்து திமுக ஊராட்சி தலைவர்கள் கூட்டம் கொரடாச்சேரியில் நேற்று நடந்தது. மாவட்ட திமுக செயலாளர், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ., ஆடலரசன் முன்னிலை வகித்தார். செல்லத்துரை வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கொரடாச்சேரி தெற்கு பாலச்சந்திரன், வடக்கு சேகர், மன்னார்குடி கிழக்கு குமரேசன், கோட்டூர் ஞானி உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ பேசுகையில், உள்ளாட்சியில் பதவி ஏற்று ஓராண்டு இன்று (நேற்று) நிறைவு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள். தற்போது சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஊராட்சிகளில் உயர்கோபுர விளக்கு, ஆர்ஓ வாட்டர் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

உயர் கோபுர விளக்குக்கு 40 சதம் வரை கமிஷன் என்று கூறி ரூ.4 லட்சம் மதிப்புள்ள கோபுர விளக்கை ரூ.2 லட்சம் என்று போட்டு ஏமாற்றுகின்றனர். அதே போன்று ஒரு லிட்டர் ஆர்ஓ வாட்டர் தயாரிக்க 8 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மீதம் 7 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உள்ளாட்சி தலைவர்களின் அதிகாரத்திற்கு உச்சநீதி மன்றம் வரை அதிகாரம் உள்ளது. தற்போது உள்ளாட்சி நிதிகளை கொள்ளையடிக்க பல திட்டங்களை அரசு கொண்டு வருகிறது. ஆனால், ஊராட்சிகளில் சிறிய பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி தலைவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்ற மக்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். கணேஷ்குமார நன்றி கூறினார்.

Tags : panchayat leaders ,DMK ,MLA ,government ,attack ,Poondi Kalaivanan ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்