×

அரசியல் சண்டைக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதா? சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை செயலகத்தில் கடந்த 2003 முதல் 2007 வரை நடந்த பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், விசாரணையை தொடங்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ‘‘உங்கள் அரசியல் சண்டைகளுக்கு அரசு இயந்திரத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? இதை நாங்கள் உங்களிடம் பலமுறை கூறி உள்ளோம்’’ என கடும் கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முன்னதாக இமாச்சல் பிரதேச பவர் கார்ப்பரேஷன் பொறியாளர் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐயில் இருக்கும் அதிகாரிகள் சுத்த வேஸ்ட், தகுதியவற்றவர்கள் என கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது.

Tags : Supreme Court ,CBI ,New Delhi ,Jharkhand High Court ,Jharkhand Legislative Assembly Secretariat ,
× RELATED இந்தியர்களை ஒருங்கிணைக்கிறது வந்தே மாதரம்: பிரியங்கா காந்தி