×

ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு இந்திய கம்யூ, ஆதரவு: மு.வீரபாண்டியன் அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர்களும், ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் காலத்தில் ‘பழைய ஓய்வூதியத் திட்டம்’ அமல்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. எனவே, அரசுப பணியாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

Tags : Indian Comeau for ,Requests ,Mu. Veerapandian ,Chennai ,Secretary of State of ,Communist Party ,of ,India ,Veerapandian ,Jaxto-Jio ,Kalib ,
× RELATED திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...