×

விஜய்யுடன் கூட்டணி ஜனவரியில் முடிவு: நூல் விட்டு பார்க்கும் நயினார்

நெல்லை: விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி தொடர்பாக வரும் ஜனவரி மாதம் பேசி முடிவெடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசுக்கு எதிராகவே தமிழக அரசு போராடி வருகிறது. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. விஜய் பாஜவுடன் கூட்டணியில் இணைவார் என கூறுவோர் ஆசை நிறைவேறட்டும். விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி தொடர்பாக ஜனவரியில் பேசி முடிவெடுக்கப்படும். கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது. இதற்கு முந்தைய காலங்களில் வலுவான கூட்டணி அமைத்த கட்சிகள் கூட தோல்வியை சந்தித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Vijay ,Nella ,Nayinar Nagendran ,Taweg ,U. ,89th Memorial Day of Chidambarana ,President of the ,of ,Bahia ,Wausi ,Manimandapam ,Chidambarana ,89th Memorial Day ,
× RELATED கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி;...