×

அரவைக்கு நெல் அனுப்பிவைப்பு திமுக மக்கள் கிராமசபை கூட்டத்தில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி போராட்டம்

பட்டுக்கோட்டை, ஜன.7: அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடந்த திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த செம்பாளூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நேற்று மாலை மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் மாரியாயி பன்னீர்செல்வம், செம்பாளூர் கிளை செயலாளர் வீரபுத்திரன் மற்றும் வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்ட கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சியில் நிறைவேறாத குடிதண்ணீர், சாலை, இலவச வீடு, பேருந்து உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கோரிக்கை விடுத்தனர். மேலும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் காஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு ஊதுபத்தி ஏற்றி, மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஏராளமானோர் கையொப்பமிட்டனர்.

Tags : Paddy ,Arava DMK People ,Village Council ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்