×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; தமிழ்நாடு அணி 455 ரன் குவிப்பு: உ.பி. நிதான ஆட்டம்

 

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் எலைட் குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு – உத்தரப்பிரதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு, பாபா இந்திரஜித் (149 ரன்), ஆந்த்ரே சித்தார்த் (121 ரன்), குருசாமி அஜிதேஷ் (86 ரன்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 455 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன் பின் உத்தரப்பிரதேசம் முதல் இன்னிங்சை துவக்கியது.

அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் கோஸ்வாமி அற்புதமாக ஆடி ஆட்டமிழக்காமல் 104 பந்துகளில் 54 ரன் எடுத்தார். மற்றொரு துவக்க வீரர் மாதவ் கவுசிக் 21 ரன்னில் சாய் கிஷோர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 2ம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் உத்தரப்பிரதேசம் ஒரு விக்கெட் இழந்து 87 ரன் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.

Tags : Ranji Trophy ,Cricket ,Tamil Nadu ,U.P. ,Coimbatore ,Uttar Pradesh ,Ranji Trophy Cricket Elite Group A ,Baba Indrajith ,Andre Siddharth… ,
× RELATED பிட்ஸ்