×

உயர்நீதிமன்ற உத்தரவால் 14 துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

 

புதுடெல்லி: உயர் நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டில் 14 பல்கலையில் துணை வேந்தர்களை நியமிக்க முடியவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்,\\” தமிழ்நாட்டில் உள்ள 21 பல்கலைக்கழகங்கள் தலைவர் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்த வழக்கை தொடர்ந்த நபர் எதற்கும் சம்பந்தம் இல்லாதவர் ஆவார். அவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,\\” ஜனாதிபதி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த தமிழ்நாடு தரப்பு வழக்கறிஞர்கள்,\\” இந்த வழக்கிற்கும், ஜனாதிபதி கேள்வி விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் 14 பல்கலைக்கழகங்களுக்கு தற்போது துணை வேந்தர்களை நியமிக்க முடியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 2ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu ,Justice ,Suryakanth… ,
× RELATED டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்கை...