திருச்சி: விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை, அனைத்து கடன்களும் தள்ளுபடி, 60வயது அடைந்தால் மாதம் ரூ.5,00 ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை (19ம்தேதி) முதல் தொடர் போராட்டம் நடத்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது. இதற்காக சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 132 விவசாயிகள் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அல்லது சாகும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். இந்த கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிய அரசு தவறினால் விவசாயிகள் சாவதை தவிர வேறு வழி இல்லை என்றார்.
