×

மன்னார் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி டெல்டா வட மாவட்டங்களில் கனமழை

சென்னை: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டது. இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது.இதையடுத்து தமிழகத்தில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்ைன வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோரத்தில் அனேக இடங்களிலும், உள் தமிழகத்திலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் ஈரோடு மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கோவை, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டது. இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது. மேலும், 22ம் தேதிவாக்கில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கனமழை முதல் மிக கனமழை நேற்று பெய்துள்ளது. மேலும் அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் நேற்று கனமழை பெய்தது. இதையடுத்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் . இதேநிலை 23ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

Tags : Mannar ,Delta ,Chennai ,southwest Bay of Bengal ,Sri Lankan ,Sri Lankan coast ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...