×

விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு குறைதீர் கூட்டங்கள் நேரிடையாக நடத்த கோரி 9ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

பெரம்பலூர்,ஜன.6: விவசா யிகள், பொதுமக்கள், நுகர் வோர் குறைதீர்க்கும் கூட்ட ங்களை இனியும் காணொ ளிக்காட்சி மூலம் நடத்தாம ல், நேரடியாக நடத்த கோரி வரும் 9ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைந்த பெ ரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று, சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம், திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை, அரியலூர் மாவட்ட தலை வர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க் கும்நாள் கூட்டம், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலங்களில் மின்நுகர்வோ ர் குறைதீர்க்கும் நாள் கூட் டம், வாரம்தோறும் திங்கள்கிழமையன்று நடத்தப்பட்டு வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க் கும்நாள் கூட்டம், முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட் டம், ஓய்வுபெற்ற அலுவலர் கள், சுதந்திரபோராட்டதியா கிகள், வாரிசுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியன மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்,வருவா ய் கோட்டாட்சியர் நடத்தி வந்த குறைதீர்க்கும்நாள் கூட் டம் போன்றக் கூட்டங்கள், இனியும் காணொளி காட்சி முறையில் நடத்தப்படாமல், குறைகளை நேரில் தெரிவித்து தீர்வுகாண ஏதுவாக முன்புபோல, அரசு விதிமுறைகளின்படி நேர்காணல் கூட்டங்களாக, இயல்பாக ஜனவரி மாதம் முத ல் தொடர்ந்து நடத்திட வேண்டும்.

இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக வருகிற 9ம் தேதி பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், தமி ழக விவசாயிகள் சங்கம் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்
என சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள தமிழக அரசின் வேளாண்உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளருக்கு கடிதம் அனுப்புவது என முடிவு செய்து கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் நீலக ண்டன், மாவட்டபொருளா ளர்மணி, திருச்சி மாவட்ட செயலாளர் கணேசன், அரியலூர் மாவட்ட செயலாளர் விசுவநாதன், மாவட்ட பொருளாளர் செல்வசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,meetings ,office ,farmers Demonstration ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...