×

கொரோனா தடுப்புக்கான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி

வேலூர், ஜன.6: கொரோனா தடுப்புக்கான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன வைப்பு அறைகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்களுக்கு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததும், அதனை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்ள ஆயத்தப்பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டது. அதன்படி, தமிழகத்தில் மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு முன்களப்பணியாளர்களின் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்தது. இதற்கிடையே அவசர கால பயன்பாடாக கொரோனாவை தடுக்க கோவாக்சின், கோவி ஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2வது கட்டமாக மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள், உள்ளாட்சி துறை பணியாளர்கள் பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கவும். இதற்கு அடுத்த கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோர்க்ள மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது கொரோனா தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்த மருந்துகள், சிரஞ்சுகள் போன்றவற்றை அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பாக வைப்பதற்கு குளிர்சாதன வைப்பு அறைகள் தயார் நிலையில் உள்ளதா? இல்லாவிட்டால் அதனை உடனடியாக தயார் செய்து வைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசியில் கோவாக்சின், கோவிஷீல்டில் எந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது என்று உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றும் வசதி உள்ளதா? என்று மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்களுக்கு, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு இணை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன வைப்பு அறைகள் தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

Tags :
× RELATED குலுக்கல் முறையில் அலுவலர்கள்...