×

54 ஆயிரம் பேருக்கு இலவச வேஷ்டி, சேலை

திருவில்லிபுத்தூர், டிச.6:  திருவில்லிபுத்தூரில் 54 ஆயிரம் பேருக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட உள்ளது. திருவில்லிபுத்தூரில் பொங்கல் பண்டிகையையொட்டி பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டி, சேலை நேற்று வந்து இறங்கியது. இவை திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. மேலும் நேற்றே பல்வேறு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து திருவில்லிபுத்தூர்  தாசில்தார் சரவணனிடம் கேட்டபோது, இலவச வேஷ்டி, சேலை பொதுமக்களுக்கு வழங்க வந்துள்ளது. அதனை பல்வேறு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று துவங்கியது. விரைவில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும். திருவில்லிபுத்தூரை பொறுத்தவரை 54 ஆயிரத்து 4 பேருக்கு இலவச வேஷ்டி மற்றும் சேலை வழங்கப்பட உள்ளது என்றார்.

Tags : Vashti ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில்...