×

அரசியலில் இருந்து விலகுவாரா பிரசாந்த் கிஷோர்?… வெறும் ரூ.10,000க்கு விலை போன தேர்தல் என விமர்சனம்

பாட்னா : பீகார் சட்டமன்ற தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி 203 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதில் 91 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக. 80 தொகுதிகளில் முன்னிலை பெற்று நிதிஷ் குமாரின் JDU 2வது இடத்தில் உள்ளது. இண்டியா கூட்டணி 34 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான ஜன்சுராஜ் வேட்பாளர்கள் 1000க்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர். இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பதிவிட்ட பிரசாந்த் கிஷோர், “வெறும் ரூ.10,000க்கு விலை போன தேர்தல் என விமர்சனம் செய்துள்ளார். இதனிடையே பீகார் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்த நிலையில், அவர் அரசியலை விட்டு விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : Prashant Kishore ,Jan Suraj Party ,Bihar Assembly elections ,BJP ,Bihar ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி