×

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்சிஎம் நிறுவனம் ரூ.50 கோடி முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம், 2500 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடந்த நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எஸ்சிஎம் கார்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஜவுளித் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எஸ்சிஎம் கார்மென்ட்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான எஸ்சிஎம் கார்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்),

உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட ஆடைகள் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தி அலகு அமைத்திட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் நேற்று, இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Tags : SCM ,Tiruvarur district ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Chennai Secretariat ,Tamil Nadu ,Department of Industry, Investment Promotion and Commerce ,SCM… ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...