×

ஜெகதளா கிராமத்தில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்

குன்னூர், ஜன.5: ஜெகதளா கிராமத்தில் படுகரின மக்களின்  பண்டிகையான ஹெத்தையம்மன் திருவிழா, பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது. நீலகிரியில் உள்ள படுகரின மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகை கடந்த சில நாட்களாக  நடந்து வருகிறது. குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தை சுற்றியுள்ள காரக்கொரை, மஞ்சுதளா, மல்லிகொரை, பேரட்டி, ஓதனட்டி, பிக்கட்டி உட்பட 8 ஊர்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து விழாவை கொண்டாடுகின்றனர்.
விரதம் இருந்த ஹெத்தைக்காரர்கள் கடந்த 7 நாட்களாக காரக்கொரை கிராமத்தில் உள்ள `மக்கமனை’ என்ற கோயிலில் தங்கி, சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர், ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு, ஆறு ஊர்களில் உள்ள கோயில்களுக்கு சென்று, சிறப்பு பூஜை செய்தனர்.

நேற்று காலை படகர் இன மக்கள் வெள்ளை சீலை போர்த்தி, பாரம்பரிய உடையணிந்து, ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு, ஜெகதளா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.  ஜெகதளா கிராமத்தில் `மடியறை’ என்ற இடத்தில் உள்ள ஹெத்தையம்மன் சிலையை அலங்கரித்து, ஊர்வலமாக அழைத்து வந்தனர்.  பக்தர்கள் காணிக்கையை அம்மனுக்கு செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா காரணமாக விழா எளிமையாக நடத்தப்பட்டது. கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் செங்கோல்களுடன், ஹெத்தையம்மன் ஊர்வலம் வனப்பகுதிகள் வழியாக நடந்தே வந்து கோயிலை அடைந்தனர்.

Tags : Hettaiyamman ,Jegathala ,village ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி